தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - ஈ டிவி பாரத் தமிழ்நாடு

ஈ டிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்... இதோ...

TOP 10 NEWS, E TV BHARAT TOP 10
E TV BHARAT TOP 10 NEWS

By

Published : May 18, 2021, 7:09 PM IST

1. தமிழினப்படுகொலை நாள்: வீடுகளிலேயே வீரவணக்கம் செலுத்த பழ. நெடுமாறன் வேண்டுகோள்

கரோனா நோய்ச்சூழல் காரணமாக தமிழர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் மெழுகுவர்த்திகள் ஏற்றி, முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த மக்களை நினைவுகூர வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2. 'கண்ணீர் அஞ்சலி' - அட்ரஸ் இல்லாத போஸ்டர் உங்களுக்கானதா..?

புகைப்படம், பெயர், முகவரி இல்லாமல் வெளியாகி வைரலான கண்ணீர் அஞ்சலி போஸ்டர் நமக்கான எச்சரிக்கை மணி என்பதை மட்டும் நினைவில் கொண்டு செயல்படுங்கள்.

3. வீடுகளை விட்டு வெளியே வந்தால்... - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

கரோனா வைரஸ் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியே வருவது கண்டறியப்பட்டால். அபராதம் விதிக்கப்பட்டு கரோனா பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.

4. மறைந்த எழுத்தாளர் கி.ரா.விற்கு சிலை அமைக்கப்படும் - மு.க. ஸ்டாலின்

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

5. புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதி - முதலமைச்சர் அறிவிப்பு

புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

6. கரோனா ஊரடங்கு - தேவைப்பட்டால் துணை ராணுவப் படையை அழைக்கலாம் - ராமதாஸ்

கரோனா ஊரடங்கை கடுமையாக்க, தேவைப்பட்டால் துணை இராணுவப் படையை அழைக்கலாம் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

7. காரைக்குடியில் அமைச்சர் தலைமையில் ஆய்வு!

காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

8. தஞ்சையில் ஊரடங்கு விதியை மீறிய வாகனங்கள் அதிரடி பறிமுதல்!

ஊரடங்கு விதியை மீறிய 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

9. எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை - பிரியா பவானி சங்கர்

கி.ரா.வின் சிறுகதைகள் நான் வாழாத உலகத்தை மனதில் பதிய வைத்தது. எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை என பிரியா பவானி சங்கர் எழுத்தாளர் கி.ரா.வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

10. ட்வீட் செய்து வேகமாக டெலிட் செய்த அஸ்வின்: ஏன் தெரியுமா?

சென்னைக்குள் பயணிப்பதற்கு எங்கு இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும் என்று நக்கலாக ட்வீட் செய்த கிரிக்கெட் வீரர் அஸ்வின், பின் அந்தப் பதிவை ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details