தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - 1 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்.

e-tv-bharat-top-10-news-1-pm
e-tv-bharat-top-10-news-1-pm

By

Published : Oct 17, 2020, 12:43 PM IST

நீட் முடிவுகள்: குளறுபடி திருத்தம், புது பட்டியல் வெளியீடு

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடியான தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது திருத்தப்பட்ட பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. முன்னதாக தவறான விவரகங்களுடன் இருந்த பட்டியல் nta.ac.in இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது.

மகாராஷ்டிராவில் 48 பேர் வெள்ளத்தில் பலி : ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிப்பு

கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்கள் வெள்ளத்தில் இருந்து மீளத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என அம்மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

அதிமுக 49ஆவது ஆண்டு தொடக்க விழா : சொந்த ஊரில் கொடி ஏற்றிய முதலமைச்சர்!

சேலம் : அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் அக்கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

”அரசுப் பள்ளி மாணவர்களின் நீட் தேர்ச்சி விகிதம் உயர்வு வரவேற்ககூடியது” - சி.வி.சண்முகம்

விழுப்புரம் : நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது வரவேற்கக்கூடிய ஒன்று என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

சில மணி நேரங்களிலேயே பல லட்சம் லஞ்சம் வசூல் : ஓசூர் சோதனைச் சாவடியில் சிக்கிய அலுவலர்கள்

கிருஷ்ணகிரி : ஓசூர் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 120 ரூபாய் கைப்பற்றப்பட்டது.

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,464 ரூபாய் குறைவு!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,464 ரூபாய் குறைந்து 37ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராம சபை மீட்பு வாரம் : பொதுமக்களிடம் கோரிக்கை!

சென்னை : கிராம சபை மீட்பு வாரத்தின் கடைசி நாளான இன்று (அக்.17) பொது மக்களுக்கு மூன்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

கலெக்டர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா ஒத்திவைப்பு!

கள்ளக்குறிச்சி : மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவின் தேதி தள்ளிவைக்கப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக 49ஆவது ஆண்டு தொடக்க விழா : சொந்த ஊரில் கொடி ஏற்றிய முதலமைச்சர்!

சேலம் : அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் அக்கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 62 ஆயிரத்து 211 நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details