கரோனா பாதிப்பின் காரணமாக, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு பல தளர்வுகள் அளித்தாலும்; மாநில அரசு பாதிப்புக்கு ஏற்றவாறு முடிவுகள் எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு மாவட்டங்களை எட்டு மண்டலங்களாகப் பிரித்து, தளர்வுகள் அளித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர; மற்ற மாவட்டங்களில் 60 விழுக்காடு பயணிகளுடன் பொது போக்குவரத்து செயல்படலாம். ஈ-பாஸ் அதற்குத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மண்டலத்தை விட்டு மண்டலம் சென்றால், கட்டாயம் ஈ-பாஸ் தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.