மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்திருக்கும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது, காவல்துறை நடத்திய தடியடிக்கு எதிராகவும், கட்டண உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
சாஸ்திரி பவனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மேலும், சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலைக்குக் காரணமான, பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை கைது செய்ய வேண்டுமெனவும்; அவ்வாறு கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.
இதையும் படிங்க:சைதாப்பேட்டையில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கவேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்