தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை - DVAC raid in former minister Thangamani

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தங்கமணி
தங்கமணி

By

Published : Dec 20, 2021, 7:30 AM IST

Updated : Dec 20, 2021, 9:00 AM IST

முன்னாள் அதிமுக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் இம்மாதம் 15 ஆம் தேதி தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவருக்கு சொந்தமான 69 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 2.16 கோடி பணம், 1.130 கிராம் தங்கம், பல வங்கிகளின் பெட்டக சாவிகள், ஹார்டிஸ்கள், செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து இன்று (டிசம்பர் 20) தங்கமணிக்கு தொடர்புடைய 14 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல்லில் 10 இடங்களிலும், ஈரோட்டில் 3 இடங்களிலும், சேலத்தில் 1 இடத்திலும் சோதனை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தங்கமணி உள்ளிட்ட 3 பேரையும் விசாரணைக்கு அழைக்கலாம் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:முறைகேடு பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த தங்கமணி?

Last Updated : Dec 20, 2021, 9:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details