தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை - 5 இடங்களில் நிறைவு - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் 5 இடங்களில் சோதனை நிறைவு பெற்றுள்ளது.

dvac
dvac

By

Published : Aug 10, 2021, 6:25 PM IST

சென்னை : தமிழ்நாடு முழுவதும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினர் 10 மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் சென்னையில் 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர். தற்பொழுது அரும்பாக்கம், எம்ஆர்சி நகர், அடையார் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனையை நிறைவு செய்துள்ளனர்.

இந்த சோதனையில் டெண்டர் ஒதுக்கீடு தொடர்பாகவும், அரசு வேலை ஒதுக்கீடு தொடர்பாகவும் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது. . அதுமட்டுமின்றி கணினிகள், ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்து சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: போராட வாங்க சாப்பிட்டுப் போங்க - வேலுமணி வீட்டில் விசேஷம்

ABOUT THE AUTHOR

...view details