சென்னையை அடுத்த பனையூரில் முன்னாள் அமைச்சர் காமராஜின் சகோதரர் கருணாநிதியின் பங்களா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கருணாநிதி இறந்து விட்டதால் அவரது மனைவி முத்துலட்சுமி அந்த வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இதைபோல கருணாநிதியின் மற்றொரு வீடு அடையாறு சாஸ்திரி நகர் 5ஆவது குறுக்குத்தெருவில் இருக்கிறது. அங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதைபோல கருணாநிதி அவரது மனைவி முத்துலட்சுமி நடத்தி வரும் நிறுவனம் நீலாங்கரை சரஸ்வதி நகர் பாண்டியன் சாலையில் செயல்பட்டு வருகிறது. ஆர்கே. இன்டர்நேஷனல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் சிவில் என்ஜினியரிங் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகின்றனர். இங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதைப்போல, காமராஜ் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஆடிட்டிங் செய்து வரும் நிறுவனம், மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் ஜிபிஏ கன்சல்டசிங் பிரைவேட் லிமிடெட் ஆகிய இடங்களில் இன்று காலையில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காமராஜுக்கு நெருக்கமான கட்டுமான நிறுவனமான பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அருண்குமார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து வருகிறது.