சென்னைதேனாம்பேட்டை கணக்காளர் அலுவலகத்தில் கடந்த அதிமுக ஆட்சி முடிவடைந்த ஆண்டுக்கான இந்திய கணக்காய்வு தணிக்கைத் துறை அறிக்கை, மற்றும் உதய் திட்டத்தின் முந்தைய மற்றும் பிந்தைய காலத்தில் டான்ஜெட்கோ (tangedco- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்) செயல் திறன் மீதான செயலாக்கத் தணிக்கை அறிக்கை நேற்று (மே.10) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
கூடுதல் வட்டி சுமை: இதுகுறித்து தமிழ்நாடு, பாண்டிச்சேரி அக்கவுன்டன்ட் ஜெனரல் விஸ்வநாத் சிங் ஜோடன், மற்றும் தமிழ்நாடு முதன்மை அக்கவுன்டன்ட் ஜெனரல் அம்பலவாணன் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர், "டான்ஜெட்கோவின் கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு ஏற்காத காரணத்தால் ரூ.1,003 கோடி கூடுதல் வட்டி சுமை ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் டான்ஜெட்கோ கடன் ரூ.41,688 கோடி அதிகரித்துள்ளது - இந்திய தணிக்கை துறை அதிமுக அரசு பகுதி அளவு மட்டுமே கடனை ஏற்றதால் டான்ஜெட்கோவின் நிலுவை கடன் 2015 -20 ஐந்தாண்டு காலத்தில் 81,312 கோடியில் இருந்து 1.23 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. தமிழ்நாடு அரசின் 27 அரசு நிறுவனங்கள் மற்றும் கழகங்கள் 1,205 கோடி லாபம் ஈட்டியுள்ளது. அதில் ரூ.1,011 கோடியை மூன்று நிறுவனங்களான எரிசக்தி, தொழில்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர குடும்பங்கள் லாபம் ஈட்டியுள்ளது.
கடன் சுமை: 14 நிறுவனங்கள் மற்றும் கழகங்கள் 140 கோடி ரூபாய் ஆதாயப் பங்கு தொகையை அறிவித்துள்ளது. 31 பொதுத்துறை நிறுவனங்கள் 18,629 கோடி இழப்பை சந்தித்துள்ளன. 75 சதவீதம் கடனை இலக்காக பெறலாம். மாறாக 34 சதவீதம் மட்டுமே அதிமுக அரசு பெற்றுக் கொண்டது. இதனால் டான்ஜெட்கோ 30,502 கோடி அளவிற்கு கடன் சுமையை தொடர்ந்தது.
கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சி 5 ஆண்டுகளில் கடன் ரூ.41,688 கோடி:இதன் விளைவாக டான்ஜெட்கோவிற்கு 9,150 கோடி கூடுதல் வட்டி சுமை ஏற்பட்டுள்ளது. அதிமுக அரசு பகுதி அளவு மட்டுமே கடனை ஏற்றதால் டான்ஜெட்கோவின் நிலுவை கடன் ஐந்தாண்டுகளில் 81,312 கோடியில் இருந்து 1.23 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. மேலும் வங்கி, நிதி நிறுவனங்களுக்கு ரூ.503 கோடி அளவிற்கு காலம் கடந்த அபராத வட்டியை செலுத்தியுள்ளது.
கடந்த ஆட்சியில் 10 பொதுத்துறை நிறுவனங்களில் இயக்குநர்கள் கூட்டங்கள் நடைபெறவில்லை. 6 பொதுத்துறை நிறுவனங்களில் தணிக்கைக் குழு அமைக்கப்படவில்லை, 30 பொதுத்துறை நிறுவனங்களின் வாரியக் கூட்டம் மற்றும் வாரிய குழு கூட்டங்களில் இயக்குநர்கள் 75 சதவீதம் கூட கலந்து கொள்ளவில்லை.
தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை: தமிழ்நாடு அரசு மற்றும் டான்ஜெட்கோ வட்டிச் செலவைக் குறைப்பதாக கடன்களை ஆய்வு செய்து மறுசீரமைக்கலாம். தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பு குறைப்பைத் துல்லியமாகக் கணக்கிடலாம் என உள்ளிட்ட 4 பரிந்துரைகளைத் தமிழ்நாடு அரசிடம் தெரிவித்துள்ளோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மின்சார தட்டுப்பாடு தொழில் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் - நிர்மலா சீதாராமன்