தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரிப்பன் மாளிகையில் துர்கா ஷங்கர் மிஸ்ரா ஆய்வு! - Durga Shanker Misra inspecting the Ribbon House

சென்னை: ரிப்பன் மாளிகையில் சீர்மிகு நகரம் திட்ட செயல்பாடு குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் துர்கா ஷங்கர் மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டார்.

துர்கா ஷங்கர் மிஸ்ரா  விவகாரத்துறைச்செயலாளர் துர்கா ஷங்கர் மிஸ்ரா  Durga Shanker Mishra Secretary, Ministry of Housing & Urban Affairs,  Durga Shanker Mishra  Durga Shanker Misra inspecting the Ribbon House  ரிப்பன் மாளிகையில் துர்கா ஷங்கர் மிஸ்ரா ஆய்வு
Durga Shanker Misra inspecting the Ribbon House

By

Published : Feb 13, 2021, 5:16 PM IST

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் வெள்ளம் கண்காணிப்பு பணிகள், சென்னை மெட்ரோ திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், ரிப்பன் மாளிகையில் சீர்மிகு நகரம் திட்ட செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் துர்கா ஷங்கர் மிஸ்ரா இன்று(பிப்.13) ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் பிரதீப் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

ரிப்பன் மாளிகையில் ஆய்வு மேற்கொண்ட துர்கா ஷங்கர் மிஸ்ரா
அப்போது, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், துர்கா ஷங்கர் மிஸ்ராவிடம் சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள், மேலாண்மை பணிகள், மாநகராட்சி சார்பாக நடைபெறும் பணிகள் குறித்து விளக்கினார். அவைகளை விரிவாக கேட்டறிந்த துர்கா ஷங்கர் மிஸ்ரா பணிகள் மந்தமாக செல்கிறது. தொய்வின்றி விரைவில் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:கரோனா அச்சுறுத்தல்: பணிக்குத் திரும்பிய நிறைமாத கர்ப்பிணி

ABOUT THE AUTHOR

...view details