க. அன்பழகன் மறைவைத் தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளர்பதவிக்கு துரைமுருகனை தேர்வுசெய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. இதையடுத்து அவர் தான் வகித்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
திமுக விதிகளின்படி பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்வுசெய்வதற்குப் பொதுக்குழுக் கூட்டம் கூடி முடிவுசெய்ய வேண்டும். இதற்கிடையில் கரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவில்லை.