தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரள ஆளுநரின் உரை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது - அமைச்சர் துரைமுருகன் - new dam in mullai periyar kerala govener

கேரள மாநில ஆளுநரின் உரை உச்சநீதிமன்றத்தின் ஆணையை அவமதிப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

By

Published : Feb 18, 2022, 5:21 PM IST

சென்னை: இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கேரள சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆற்றிய உரையில், கேரள அரசு முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணானது. உச்சநீதி மன்றத்தின் ஆணையை அவமதிப்பதும் ஆகும்.

புதிய அணை தேவையில்லை

மேலும் உச்சநீதி மன்றத்தின் ஆணையில் முல்லை பெரியாறு அணை எல்லா விதத்திலும் உறுதியாக உள்ளதாக அறுதியிட்டு கூறப்பட்டுள்ளது. புதிய அணை தேவையில்லை. மேலும் புதிய அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசிடம் கேரள அரசு திணிக்க முடியாது என்றும் தெளிவாக கூறியுள்ளது.

இப்படியிருக்க கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

தமிழ்நாட்டின் உரிமை

இதை எல்லாவிதத்திலும் தமிழ்நாடு அரசு எதிர்க்கும். தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 80 % வழங்க சட்டம் இயற்ற வேண்டும் - ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details