தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அசிங்க அரசியலை தவிர பாஜகவுக்கு வேறு எதுவும் தெரியாது… துரைமுருகன் கண்டனம் - நிதியமைச்சர் கார் மீது காலணி

நிதியமைச்சரின் கார் மீது காலணி வீசிய பாஜகவினருக்கு அசிங்க அரசியலை தவிர, வேறு எதுவும் தெரியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

slipper thrown on Tamil Nadu Finance ministers car  bjp thrown slipper on Finance ministers car  ptr car slipper issue  Duraimurugan Statement on ptr car slipper issue  Duraimurugan Statement  நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய பாஜக  பாஜகவுக்கு துரைமுருகன் கண்டனம்  நிதியமைச்சர் கார் மீது காலணி  பிடிஆர் காரி மீது காலணி வீசிய பாஜகவினர்
துரைமுருகன்

By

Published : Aug 14, 2022, 6:45 AM IST

Updated : Aug 14, 2022, 8:16 AM IST

சென்னை:தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் குறித்து திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"75ஆவது விடுதலை நாள் கொண்டாடப்படுகின்ற நேரத்தில், உயிரிழந்த ராணுவ வீரர் இலட்சுமணன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தேசியக் கொடி ஏற்றிய காரின் மீது காலணி வீசியிருக்கும் பாஜகவினரின் அருவருக்கத்தக்க, அரசியல் பண்பாடற்ற செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்துவதிலும், இதுபோன்று அரசியல் ஆதாயம் தேடும் அநாகரிகச் செயலில் ஈடுபட்டு, அராஜகத்தை பாஜகவினர் கையிலெடுத்திருப்பது கேவலமான அரசியல். அது ஒருவழிப்பாதை இல்லை என்பதை பாஜகவினர் உணர வேண்டும் என எச்சரிக்கிறேன்.

ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாமல், அராஜகத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடி விடலாம் என்று தமிழ்நாட்டில் பாஜகவினர் கனவு காண வேண்டாம். ராணுவ வீரரின் உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தச் சென்ற அமைச்சரின் காரின் மீது தாக்குதல் நடத்தி - உயிரிழிந்த ராணுவ வீரரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் பாஜகவிற்கு நாட்டுப்பற்று குறித்துப் பேசத் துளியும் அருகதை இல்லை என்பதோடு, இச்சம்பவத்தின் வாயிலாக அந்தக் கட்சியின் நாட்டுப்பற்று சாயம் வெளுத்துப் போயிருக்கிறது.

செருப்பு வீசுவது, சிலைகளைச் சேதப்படுத்துவது போன்ற அசிங்க அரசியல் தவிர வேறு எதுவும் பாஜகவுக்குத் தெரியாது என்பது அவர்களது பண்பாடற்ற நடவடிக்கைகளால் தெரிகிறது. பதற்றத்தைப் பற்ற வைத்து வன்முறைகள் மூலமாகக் கட்சியை வளர்க்கலாம் என்று அவர்கள் நினைத்தால் மக்கள் மன்றத்தில் அவர்கள் அரசியல் அநாதைகளாவது நிச்சயம் என எச்சரிக்கிறேன்.

ஊரெல்லாம் தேசியக் கொடி ஏற்ற வேண்டிய நேரத்தில், தேசியக் கொடி பறந்த காரில் செருப்பு வீசியதன் மூலமாக பாஜகவின் கீழ்த்தர அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள இயக்கம்.

சட்டத்தின் ஆட்சியை கடைப்பிடிக்கும் இயக்கம். அமைச்சரின் கார் மீது காலணி வீசியவர்கள், தூண்டி விட்டவர்கள், துணைபோனவர்கள் ஆகியோர் மீது காவல் துறை உரிய நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருப்பதால் திமுக தொண்டர்கள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீச்சு

Last Updated : Aug 14, 2022, 8:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details