தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொருளாளர் பதவியைத் துறந்த துரைமுருகன்: 'அடுத்தது பொ.செ.தான்' - அடித்துக்கூறும் உ.பி.க்கள்! - துரை முருகன் பொதுச் செயலாளர்

சென்னை: திமுக பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட விரும்பும் துரைமுருகன் பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகியதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

durai murugan next secretary for dmk party  dmk secretary  துரை முருகன் பொதுச் செயலாளர்
திமுகவின் பொதுச் செயலாளர் ஆகிறார் துரை முருகன்

By

Published : Mar 16, 2020, 12:49 PM IST

Updated : Mar 16, 2020, 1:41 PM IST

க. அன்பழகன் மறைவிற்குப் பின்பு திமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்துவருகிறது. இந்தப் பதவிக்கான தேர்வு வருகின்ற மார்ச் 29ஆம் தேதி பொதுக்குழுக்கூட்டத்தில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மு.க. ஸ்டாலின் திமுக பொதுக்குழுக் கூட்டம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மார்ச் 16ஆம் தேதி கடிதத்தின் வாயிலாகக் துரைமுருகன், பொதுச்செயலாளர் பதவிக்கு தான் போட்டியிட விழைவதாகவும் அவர் தனது பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் என்னிடம் தெரிவித்துள்ளதை ஏற்றுக்கொள்கிறேன்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை

எனவே, வருகின்ற மார்ச் 29ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர், பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும். அதில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைையும் படிங்க:மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

Last Updated : Mar 16, 2020, 1:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details