தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்எல்ஏ-க்களே, கேள்விகளை பட்டு பட்டுனு அடிங்க... - கிளாஸ் எடுத்த துரைமுருகன்... - மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்

"சட்டப்பேரவையில் கேள்விகளை பட்டு பட்டுனு அடிங்க" என எம்எல்ஏக்களுக்கு அவை முன்னவர் துரைமுருகன் கிளாஸ் எடுத்தார்.

durai-murugan-advised-to-all-mlas-ask-questions-quickly-at-question-hour-in-tamil-nadu-assembly கேள்விகளை எம்எல்ஏ-க்கள் பட்டு பட்டுனு அடிங்க - கேள்வி நேரம் எப்படி இருக்க வேண்டும் கிளாஸ் எடுத்த துரைமுருகன்...
durai-murugan-advised-to-all-mlas-ask-questions-quickly-at-question-hour-in-tamil-nadu-assembly கேள்விகளை எம்எல்ஏ-க்கள் பட்டு பட்டுனு அடிங்க - கேள்வி நேரம் எப்படி இருக்க வேண்டும் கிளாஸ் எடுத்த துரைமுருகன்...

By

Published : May 4, 2022, 2:25 PM IST

சென்னை: சட்டப்பேரவை 4 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று (மே.4) மீண்டும் கூடியது. பேரவை கூடியதும் முதலில் வினாக்கள் விடைகள் நேரம் (கேள்வி பதில் நேரம்) நடைபெற்றது. அப்போது, உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

2022-23ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதனிடையே, விவாதத்திற்கு முன்னதாக அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கேள்வி நேரத்தின் போது போளூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன்வள கல்லூரி வேண்டும் என கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், "மழை நீரையும், மீனவர்கள் தொடங்கி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என மீன்வள கல்லூரிகள் பற்றி பேசினார். இதற்கு குறுக்கீடு செய்த சபாநாயகர் அப்பாவு, வரலாறுலாம் வேண்டாம், கேள்வி - என்ன வேண்டும் சொல்லுங்க என்றார். என்ன மறுபரிசீலனை செய்ய வேண்டும் அதானே என தெரிவித்தார்.

போளூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மேலும், சபாநாயகர் குறுக்கீடு செய்தும், தொடர்ந்து பேசிய எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி துறைமுகம் குறித்து பேசினார். இதற்கு சபாநாயகர் துறைமுகம் அமைக்க உங்க ஊர்ல எங்க கடல் இருக்கு, கேள்விக்கு வாங்க என தெரிவித்தார். இருப்பினும் சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து பேசி கொண்டே இருந்தார்.


அப்போது குறுக்கீடு செய்த அவை முன்னவர் துரைமுருகன், எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கும் போது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து ஆம் இல்லை என பதில் அளிக்கிறார்கள். எம்.எல்.ஏக்கள் அடுத்து பேசும்போது சுருக்கமாகப் பேச வேண்டும். அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள். கேள்விகளை எம்.எல்.ஏக்கள் பட்டு பட்டுனு அடிங்க என அறிவுரை வழங்கினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் இந்த அறிவுரை எல்லா எம்.எல்.ஏ.க்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் தமிழ் அறிஞர்களுக்கு பத்மபூஷண் விருது வழங்கியிருப்பேன்' - அமைச்சர் துரைமுருகன்

ABOUT THE AUTHOR

...view details