தமிழ்நாட்டில் தேர்தல் நாளான இன்று அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென் சென்னையின் சாலி கிராமம் பகுதியின் நல்லான் தெருவைச் சேர்ந்த மூதாட்டி லட்சுமி தனது ஜனநாயகக் கடமையாற்ற வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள உயர்நிலை பள்ளிக்கு வந்துள்ளார்.
கள்ள ஓட்டு போடப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மூதாட்டி! - இடைத்தேர்தல்
சென்னை : சாலிகிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி லட்சுமியின் வாக்கை வேறொருவர் செலுத்தியதால் ஓட்டு போட முடியாமல் அவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
மூதாட்டி
அப்போது மூதாட்டியின் ஆவணங்களை சோதனை செய்த தேர்தல் அலுவலர்கள், மூதாட்டி லட்சுமியின் வாக்கு, முன்னதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஜனநாயக கடமையாற்ற வந்த மூதாட்டி தனது வாக்கினை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
Last Updated : Apr 18, 2019, 7:26 PM IST