தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் ஏ.பி. சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அத்துடன், டெங்கு காய்ச்சல் பரவி வரும் நேரத்தில் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது, ஏழை மக்களை பாதிக்கச் செய்யும் என்பதால், வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, அரசு மருத்துவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடவுளுக்கு அடுத்தபடியாக கருதப்படும் மருத்துவர்கள், ஏழை மக்களுக்கு சிகிச்சை வழங்க முடியாது என்று எப்படி மறுக்க முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.