தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலரா நோய் பரவல்: தமிழ்நாட்டில் கண்காணிப்பு தீவிரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - காலரா

காலரா நோய் பரவலை தடுக்க புதுச்சேரி ஒட்டியுள்ள தமிழ்நாடு மாவட்டங்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளோம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

காலரா பரவலால் தமிழ்நாடு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவரம்-அமைச்சர் மா.சுப்ரமணியன்
காலரா பரவலால் தமிழ்நாடு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவரம்-அமைச்சர் மா.சுப்ரமணியன்

By

Published : Jul 5, 2022, 8:53 PM IST

சென்னை:ராஜிவ் காந்தி சாலை கண்ணகி நகர் பகுதியில் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.1.49 கோடி செலவில் அப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 39 பேருக்கு காலரா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில அரசு அதற்கான செயர்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை காரைக்காலை சுற்றியுள்ள தமிழ்நாடு பகுதிகளான நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருமருகள், கணபதிபுரம், நாகூர், மயிலாடுதுறை மாவட்டத்தின் திருக்கடையூர், சங்கரன் பந்தல்.

திருவாரூர் மாவட்டத்தின் கொல்லாபுரம், வெல்லாங்குடி ஆகிய காரைக்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று (ஜூலை 04) திங்களன்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையின் இயக்குநர் நேரடியாக அப்பகுதிகளுக்கு சென்று அங்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து ஆய்வு செய்து, பொது இடங்களில் மலம் கழிப்பதனால் ஏற்படும் நோய் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவற்றிற்கு தேவையான அளவு மருந்துகளை கையிருப்பு வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களுக்கு காய்ச்சிய தண்ணீரை பருகுதல், உணவை நன்றாக வேகவைத்து உண்ணுதல் ஆகிய விழிப்புணர்வுவை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ளோம்.

புதுச்சேரிக்கு அருகே இருப்பதால், நோய் பரவும் அபாயம் காரணமாக காரைக்காலுக்கு அருகே உள்ள பகுதிகளில் கண்காணிப்பினை வலுப்படுத்த பொது சுகாதாரத் துறை சார்பாக குழு ஒன்றினை அனுப்பியுள்ளோம்.

இன்னமும் 37 லட்சத்து 33 ஆயிரத்து 298 பேர் இதுவரை முதல் தவணை தடுப்பூசி கூட போடவில்லை.

ஒரு கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 989 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆக மொத்தம் 1 கோடியே 45 லட்சத்து 72 ஆயிரத்து 287 பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். ஏற்கனவே 30 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

அந்த வகையில் 31 ஆவது மெகா தடுப்பூசி முகாம் வருகின்ற 10 ஆம் தேதி ஒரு லட்சம் இடங்களில் நடைபெறவுள்ளன.
இதற்காக வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. உலகத்தின் 110-க்கும் மேலான நாடுகளில் BA4, BA5 என்கின்ற வைரஸ் பரவி பெரிய அளவிலான பாதிப்பை உண்டாக்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவிலும் பல இடங்களில் இந்த வகை வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கடந்த வாரம் அறிவுறுத்தப்பட்டது.

துறை செயலாளர்களுக்கு இது குறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறை சார்பில் கல்வி நிறுவனங்களில் முகக்கவசம் அணிவது கண்காணிக்கப்படுகிறது. அதே போல் அரசியல் நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணிவதை கண்காணிப்பது குறித்து உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால், முகக்கவசம் அணிவது அதிகரிக்கப்படும்' என கூறினார்.

இதையும் படிங்க:தாம்பரம் மார்க்கெட்டில் பெருகும் மக்கள் கூட்டம்… தொற்று பரவும் அபாயம்

ABOUT THE AUTHOR

...view details