தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை - weather report

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை  கனமழை  தமிழ்நாட்டில் மழை  மழை நிலவரம்  மீனவர்களுக்கான எச்சரிக்கை  வானிலை அறிக்கை  சென்னை வானிலை ஆய்வு மையம்  சென்னை செய்திகள்  chennai news  chennai latset news  chennai rain update  rain update  chennai meteorological center  meteorological center  chennai weather report  weather report  southwest monsoon
மழை

By

Published : Jul 28, 2021, 1:04 PM IST

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 28) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கோயமுத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சேலம், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழை

29.07.2021 & 30.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயமுத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

கனமழை

31.07.2021 & 01.08.2021 வரை: கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

சென்னை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.

மழை அளவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு, பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகம் (நீலகிரி) 7 செ.மீ, ஆத்தூர் (சேலம்) 3 செ.மீ, நடுவட்டம் (நீலகிரி), தேவலா (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), முத்துப்பேட்டை (திருவாரூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), வாழப்பாடி (சேலம்), சோலையார் (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 2 செ.மீ பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்க கடல்

28.07.2021 முதல் 29.07.2021 வரை: வடமேற்கு, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் கவனத்திற்கு

அரபிக்கடல்

28.07.2021 முதல் 01.08.2021வரை: தென் மேற்கு, வடக்கு, மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ABOUT THE AUTHOR

...view details