சென்னை:தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று(ஜன.21) ஒரே நாளில் 29 ஆயிரத்து 870 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 30 ஆயிரம் என்ற எண்ணிக்கையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
கரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதையொட்டி இரவு நேர ஊரடங்கு (இரவு 10மணி முதல் காலை 5மணி வரை), ஞாயிறு ஒரு நாள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை, (ஜன.23) முழு ஊரடங்கையொட்டி அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகள் செயல்படாது, பேருந்துகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.