சென்னை: சர்வதேச நாடுகளில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி, சென்னையில் கல்லூரிகளில் கடந்த சில நாட்களாக புதிய clusterகள் உருவாகி வருகிறது.
இதன் காரணமாக தினசரி செய்யப்படும் கரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது பெருநகர சென்னை மாநகராட்சி. ஒரே குறிப்பிட்ட பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவது சென்னையில் அதிகரித்து வருகின்றன.
தினமும் சென்னையில் இரண்டு அல்லது மூன்று clusterகள் உருவாகின்றன. வெளிநாடுகளில் இருந்து சென்னை வருபவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.