அவசர தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விமான நிலையம் வரையிலான சேவை ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், பயணிகள் ஆலந்தூர் ரயில் நிலையம் சென்று மாறி செல்ல வேண்டும்.
வண்ணாரப்பேட்டை முதல் ஏ.ஜி. டிஎம்எஸ் வழியாக விமான நிலையம் செல்லும் நீல நிற வழித்தடம் மற்றும் எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.