தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மிக்ஜாம் புயல் எதிரொலி: தேஜாஸ், குருவாயூர் எக்ஸ்பிர்ஸ் ரயில்கள் ரத்து!

Southern railway trains cancelled: தவிர்க்க முடியாத காரணங்களால் தேஜாஸ் மற்றும் குருவாயூர் எக்ஸ்பிர்ஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தேஜாஸ் குருவாயூர் எக்ஸ்பிர்ஸ் ரயில்கள் ரத்து
மிக்ஜாம் புயல் எதிரொலி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 4:23 PM IST

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இதனால் சென்னை மாநகரரில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களாகவே சென்னையிலிருந்து புறப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் சென்னை ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட இருந்த ரயில் எண்.22671 சென்னை-மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டது. அதே போல சென்னை ரயில் நிலையத்திலிருந்து இன்று புறப்பட இருந்த ரயில் எண்.16127 சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டது.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் தாக்கம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

மேலும் இன்று இரவு சென்னை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் எண்.20605 சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண்.16101 செங்கோட்டை வழி செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் சென்னையிலிருந்து இன்று இரவு 08.25 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண்.20681 செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து புறப்படும் படி கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் எதிரொலி; இன்று ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details