காற்றழுத்த தாழ்வு காரணமாக நாளை கரையை கடக்குமென இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் தென் தமிழ்நாட்டின் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலும், வட தமிழ்நாட்டின் கோடியக்கரை முதல் பழவேற்காடு வரையிலான கடற்பகுதிகளில் சுமார் 3.0 முதல் 3.7 மீட்டர் அளவிலான உயர் அலைகள் எழக்கூடும்.
ஆகவே மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாமென அமைச்சர் ஜெயக்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில், மேற்கு மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை (13.10.2020) நர்சாப்பூருக்கும் விசாகப்பட்டினத்திற்குமிடையே கரையை கடக்குமென இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வரும் 14 ஆம் தேதி வரை, குமரி கடல், மன்னார் வளைகுடா, அந்தமான் கடல், மேற்கு மத்திய மற்றும் தென் மேற்கு வங்க கடற்பகுதிகளில் மணிக்கு சுமார் 50 முதல் 60 கி.மீ வேகத்துடன் கூடிய சூறாவளி காற்று 70 கி.மீ வரை வீசக் கூடும். அடுத்த 24 மணி நேரம் வரை அந்தமான் நிக்கோபார் தீவுகள், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரம் மற்றும் தென் தமிழ்நாட்டின் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலும், வட தமிழ்நாட்டின் கோடியக்கரை முதல் பழவேற்காடு வரையிலான கடற்பகுதிகளில் சுமார் 3.0 முதல் 3.7 மீட்டர் அளவிலான உயர் அலைகள் எழக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு கூறப்பட்ட நாள் வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'பல குடிசைகளுக்கு நடுவே சில கான்கிரீட் வீடுகள்' - சமூக ஆர்வலரின் முயற்சி