சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ, பி.டெக் படிக்கும் மாணவர்கள் விரும்பினால் கூடுதலாகப் பட்டம் பெறவும் பாடத்திட்டதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இளங்கலை பட்டத்தை படிக்கும்போது 5ஆவது செமஸ்டர் முதல் பதிவு செய்து, மேலும் ஒரு பட்டத்தினையும் படித்து, முடித்து விட்டு, பி.இ, பிடெக் ஹானர்ஸ் அல்லது இரண்டு பட்டங்களைப் பெற முடியும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் புதியப்பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்டம் 2021ஆம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்கள் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொழில்துறையினரின் கருத்துகளையும் கேட்டறிந்து தொழிற்சாலைக்குத் தேவையான வகையில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் பாடத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.