தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரும் சட்டப்பேரவையில் தேர்தலில் இரு தொகுதிகளில் டிடிவி தினகரன் போட்டி! - சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதியில் டிடிவி தினகரன் போட்டி

சென்னை: 2021 சட்டப்பேரவை தேர்தலில் ஆர்.கே.நகர் உள்ளிட்ட இரு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம்

By

Published : Mar 12, 2020, 4:35 PM IST

சென்னை ராயப்பேட்டையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. அத்தலைமை அலுவலகத்தை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திறந்து வைத்தார்.

கட்சி அலுவலகத்துக்கு வந்த டிடிவி தினகரன், கழகக் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி, பின் கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், 2021ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு கட்சிப் பணிகளைத் தொடங்க உள்ளதாகவும், வெற்றிகரமான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, 2021 அல்லது அதற்கு முன்பாக சசிகலா வெளியில் வந்துவிடுவார் என்றும், சட்டபேரவை தேர்தலில் தமக்கு ஆதரவாக சசிகலா இருப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், 2021ஆம் ஆண்டு தேர்தலில், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிகளும், தென் மாவட்டங்களில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் கூறினார்.

அதுபோல, பெரியார், அண்ணாவைப் போல் நடிகர் ரஜினிகாந்துக்கும் ஆட்சி அதிகாரம் பற்றிய கருத்து கூறும் சுதந்திரம் இருக்கிறது. மேலும், எதுவாகினும் அது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் கூறினார். மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் கொண்டு வரக்கூடாது. இந்திய மக்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் திறப்பு

சட்டபேரவையில், CAA, NRC, NPR சட்டங்களுக்குத் தீர்மானம் நிறைவேற்றுவது, என்பது மக்களை திருப்திப்படுத்துவதற்காக மட்டும் தான். அதனால் ஒரு உபயோகமும் இல்லை. தீர்மானம் கொண்டு வருவது என்பது ஏமாற்று வேலை என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:இன்னைக்கும் அதே தேதி: 'இருக்கு தரமான சம்பவம்' - ரஜினிக்கு ஆதரவாக ட்ரெண்டாகும் மீம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details