தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்திரிகையாளர் அன்பழகன் கைதுக்கு டிடிவி தினகரன் கண்டனம் - Journalist arrested at Chennai book fair

சென்னை: பத்திரிகையாளர் அன்பழகன் கைதுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர் அன்பழகன் கைதுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
பத்திரிக்கையாளர் அன்பழகன் கைதுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

By

Published : Jan 12, 2020, 1:42 PM IST

சென்னையில் மக்கள் செய்தி மையம் பதிப்பகம் நடத்தி வந்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "சென்னை பத்திரிகையாளர் சங்கத் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான அன்பழகன் இன்று அதிகாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

சென்னை புத்தகக் கண்காட்சியில் அவருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட புத்தகங்களில், ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துடைய புத்தகங்கள் இருந்ததுதான், இந்த கைதுக்கான பின்னணி எனச் சொல்லப்படும் செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன.

பத்திரிகையாளர் அன்பழகன் கைதுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற செயல்களை தமிழ்நாடு அரசு நிறுத்திக் கொள்ளவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கைது செய்யப்பட்ட அன்பழகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கத்தரிக்காய் முற்றினால் கடை வீதிக்கு வந்துவிடும்! - டிடிவி சூசகம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details