தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பாஜகவை வளர்ப்பது மு.க. ஸ்டாலினும், திருமாவளவனும் தான்" - டிடிவி தினகரன் - Edappadi Palaniswami s mismanagement

தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பது முதமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவனும் தான் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின், திருமாவளவன் இருவரும் தான் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பது- டிடிவி தினகரன்
மு.க.ஸ்டாலின், திருமாவளவன் இருவரும் தான் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பது- டிடிவி தினகரன்

By

Published : Oct 12, 2022, 3:54 PM IST

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், "தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. தமிழை பயன்படுத்தி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் திமுகவினர்.

தமிழ்நாடு மக்கள் சாதி, மதத்தை கடந்து நல்ல ஆட்சி யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்குதான் வாக்களிக்கின்றனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர், ஜெயலலித இருவரும் சிறப்பான ஆட்சியை கொடுத்தார்கள். எம்ஜிஆர் மூலம் ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி என்று அனைவருக்கும் தெரியும்.

எடப்பாடி பழனிசாமியின் தவறான நிர்வாகத்தால்தான் மக்கள் திமுகவிற்கு வாக்களித்தனர். நிதி நிலைமை மோசமாக இருந்தும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்.

திமுக பொதுக்குழுவில் அமைச்சர்களால் தூக்கத்தை இழந்தேன் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் சர்ச்சையாக பேசியிருந்தால் அன்றே பதவி பறிபோயிருக்கும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அமைச்சர்களுக்குதான் தூக்கம் இல்லாமல் இருந்தது.

ஜெயலலிதா கண்டிப்புடனும், கனிவுடனும் இருந்ததால் தான் ஆட்சியை சிறப்பாக நடத்த முடிந்தது. ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வு, மீத்தேன் திட்டங்கள் வர முடிந்ததா..?. செந்தில் பாலாஜி 2016ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்த போது மு.க.ஸ்டாலின் எவ்வளவு குற்றம்சாட்டி இருக்கிறார்.

மக்களாகிய எஜமானர்களை பார்த்து அமைச்சர் பொன்முடி ஓசி என்கிறார். துரைமுருகன், ஆர்.ராசா போன்றவர்கள் செயல்களால் முதலமைச்சர் புலம்புகிறார். அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தன்னுடைய மகனுக்கு முடிசூட்ட முடியாது என்ற பயம் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது.

நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் அமல், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 போன்ற வாக்குறுதிகளை கொடுத்து மக்களை திமுக ஏமாற்றியுள்ளது. இந்தி திணிப்பை எதிர்த்து மக்களோடு மக்களாக தோள் நின்று போராடுவோம். வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலும் வரும்.

2,000 ஆண்டுகளுக்கு முன்பு வழ்ந்த அரசர் இராஜராஜ சோழனை வம்புக்கு இழுக்கின்றனர். மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இருவரும் தான் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பது. இந்துகளை தாக்கி கொண்டு பேசுவதால் பாஜக வளர்வதற்கு இவர்களே வழிவகுத்து கொடுக்கின்றனர். மீண்டும் அம்மாவின் ஆட்சி தமிழ்நாட்டில் மலரும்" என்றார்.

இதையும் படிங்க:பள்ளிக்குழந்தைகளுக்கு "குட்டி காவலர்"சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details