தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பினை இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்.
2002-03ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர்வதற்கு ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியினருக்கு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதுமானது எனவும், பிற வகுப்பினர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிபெற்று 45 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என அரசு அறிவித்தது.
தற்போது உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் பட்டயப்படிப்பு முடித்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு சேர்வதற்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வினை எழுத வேண்டும். இந்நிலையில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்துவிட்டு தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதுவதற்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேர் பதிவு செய்துள்ளனர்.