சென்னை:சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, பிப்ரவரி 8ஆம் தேதி பெங்களூரிலிருந்து கிளம்பி தமிழ்நாடு வந்தார். அவரை வரவேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் அறிவழகன் காவல்துறையிடம் விண்ணப்பித்திருந்தார்.
இதை பரிசீலித்த காவல் துறையினர், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் அனுமதியளித்தனர். இதுதொடர்பான நோட்டீசை, அனுமதி கோரிய அறிவழகனிடம் கொடுக்காமல், தமிழ்நாடு எல்லைக்குள் வந்த சசிகலாவிடம் கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன் கொடுத்தார்.