தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜனவரி 13ஆம் தேதி முதல் தமிழகத்தில் வறண்ட வானிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..

Dry Weather in TN: ஜனவரி 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Dry weather will prevail in Tamil Nadu from January 13 report by Meteorological Centre
தமிழகத்தில் ஜன.13 முதல் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 4:15 PM IST

சென்னை: ஜனவரி 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேரள கடலோரப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், நாளை (ஜன.12) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதைத் தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 30 - 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 - 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில், நாலுமுக்கு 15 செ.மீ மழையும், ஊத்து 13 செ.மீ மழையும், காக்காச்சி 12 செ.மீ மழையும், மாஞ்சோலை 9 செ.மீ மழையும், ராதாபுரம் 4 செ.மீ மழையும், கன்னியாகுமரி மாவட்டத்தில், கொட்டாரம் 3 செ.மீ மழையும், பெருஞ்சாணி புத்தன் அணை, பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 2 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: நாளை (ஜன.12) குமரிக்கடல் பகுதிகள், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 13ஆம் தேதி அன்று தென்கிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

14ஆம் தேதி அன்று தென்கிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது!

ABOUT THE AUTHOR

...view details