தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம் - வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்

By

Published : Apr 4, 2019, 7:07 PM IST

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகக் காணப்படும்.

சென்னையைப் பொருத்தவரை வானம் தெளிவாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸும் பதிவாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வரைபடம்

ABOUT THE AUTHOR

...view details