சென்னைவானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (பிப்.10) முதல் வரும் 14ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: "அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த பகுதியிலும் ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு கூட மழைப் பதிவாகவில்லை. மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை"எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.