தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அடுத்த 4 நாட்களுக்கு வெயில் உக்கிரமா இருக்கும் - பார்த்து மக்களே!' - தமிழ்நாடு புதுச்சேரியில் வறண்ட வானிலை

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

che
che

By

Published : Feb 12, 2023, 4:03 PM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(பிப்.12) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். வரும் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனி மூட்டம் காணப்படுகிறது. இன்று காலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். குறிப்பாக சைதாப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை போன்ற பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக சென்றனர். அடுத்த நான்கு அல்லது ஐந்து நாட்களில் தமிழ்நாட்டில் மூடுபனியின் தாக்கம் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையில் பிப்.14ஆம் தேதி குடிநீர் நிறுத்தம்..! எந்தெந்த பகுதிகள்..?

ABOUT THE AUTHOR

...view details