திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலை (வயது 36), அமுல்ராஜ் (வயது 35) ஆகிய இருவரும் சென்னை மீனம்பாக்கம் அடுத்த பழவந்தாங்கல் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களது உறவினர் ஒருவர் உடல்நலக் குறைவால் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரைப் பார்ப்பதற்காக இருவரும் மருத்துவமனை வந்துள்ளனர்.
ஆனால் உறவினரை சந்திக்கும் முன்பே மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் உள்பட அனைவரையும் தகாத வார்த்தையால் பேசி இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனை சார்பில் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர், அவ்விருவரையும் அழைத்து விசாரிக்க முற்பட்டனர். அப்போது இருவரும் காவல் துறையினரையும் தகாத வார்த்தையில் திட்டவே பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.