சென்னை: எழும்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பாலாஜி (30). இந்நிலையில் தீபாவளி நாளன்று புதுப்பேட்டையில் உள்ள கொய்யா தோப்பு பகுதியில் சிலர் குடிபோதையில் இடைவிடாமல் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
பின்னர், காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு எழும்பூர் காவல் நிலைய காவலர்கள் கார்த்திகேயன், பாலாஜி, செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது அங்கு ஒருவர் பட்டாசு வெடித்துக் கொண்டே கூச்சலிட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட காவலர்கள் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் புதுப்பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (எ) ஜெயபிரகாஷ் என்பது தெரியவந்தது. அப்போது அருகில் குடிபோதையில் நின்றுகொண்டிருந்த மேலும் இரு நபர்கள் போலீசாரிடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காவலர்கள் கார்த்திகேயன் மற்றும் செல்வம் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களைத் தவிர்த்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட ஜெயபிரகாஷை ரோந்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட, காவலர் பாலாஜி தனது இருசக்கர வாகனத்தில் ஏறி புறப்பட முற்பட்டார்.
அப்போது குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரும் தீடிரென காவலர் பாலாஜியை வழிமறித்து கையால் அடித்தும், காலால் வயிற்றில் எட்டி உதைத்தும் தாக்குதலில் ஈடுபட்டனர்.