சென்னை திருவான்மியூர் - அடையார் சந்திப்பில் போக்குவரத்து காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை வழிமறித்த காவல்துறையினர் அபராதம் செலுத்துமாறு கேட்டுள்ளனர். அப்போது போதையில் இருந்த ஒருவர் தான் வாகனத்தை ஓட்டவில்லை, பின்னால் அமர்ந்து வந்த நபர் தான் வாகனத்தை ஓட்டியதாக காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
'எனக்கு ஐகோர்ட் வக்கீலைத் தெரியும்' - குடிபோதையில் காவலரிடம் தகராறு செய்த இளைஞர்! - police
சென்னை: குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்தவர், போக்குவரத்து காவல்துறையினரிடம் தகராறு செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
!['எனக்கு ஐகோர்ட் வக்கீலைத் தெரியும்' - குடிபோதையில் காவலரிடம் தகராறு செய்த இளைஞர்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4203337-thumbnail-3x2-police.jpg)
drunk and drive
மேலும், தான் குடிபோதையில் இல்லை, எதற்காக அபராதம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தனக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரை தெரியும், அவரிடம் பேசுங்கள் என்றும் கூறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
குடிபோதையில் போலீசிடம் தகராறு செய்யும் இளைஞர்
மேலும் போக்குவரத்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் மீது அடையாறு போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.