சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி நகரில் பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் மதுபோதையில் ரகளையில் ஈடுபடுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. தகவலறிந்த புதுவண்ணாரப்பேட்டை தலைமை காவலர் மற்றும் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது தளபதி என்பவரின் மகன்கள் மற்றும் நண்பர்களை தலைமை காவலர் விசாரணை செய்தார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் தலைமைக் காவலரின் தலைக்கவசத்தை பிடுங்கி உடைத்ததுடன், அவரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடினர்.