தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயர் ரக கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் - போதை பொருள்

சென்னை விமான நிலையத்தில் நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட உயர் ரக கஞ்சா, போதை மாத்திரைகள் சுங்கத் துறை அலுவலர்களால் பறிமுதல்செய்யப்பட்டன.

drugs-seized-in-chennai-airport
drugs-seized-in-chennai-airport

By

Published : Nov 17, 2021, 4:17 PM IST

சென்னை:சென்னை விமான நிலைய சரக்ககப் பிரிவிற்கு வெளிநாடுகளிலிருந்து வந்த கொரியர் பார்சல்களை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்கள் சோதனைசெய்தனர். அப்போது, நெதர்லாந்திலிருந்து, சென்னைக்கு ஒரு பார்சல், வாழ்த்து அட்டை பொருத்திவந்திருந்தது. இந்தப் பார்சலை சந்தேகம் கொண்ட சுங்கத் துறை அலுவலர்கள் பிரித்து பார்த்தபோது 11 கிராம் கொண்ட 25 பச்சை நிற போதை மாத்திரைகள் இருந்தன.

அமெரிக்காவிலிருந்து வந்த உயர் ரக கஞ்சா

இதற்கிடையில், அமெரிக்காவிலிருந்து ஆந்திராவுக்கு வந்த பார்சலில் 24 கிராம் உயர் ரக கஞ்சா இருந்தது, மேலும் அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத்துக்கு வந்த பார்சலில் 105 கிராம் உயர் ரக கஞ்சா இருந்தது.

மூன்று பார்சல்களிலிருந்து வந்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், 129 கிராம் எடை கொண்ட கஞ்சா ஆகியவற்றை சுங்க இலாகா அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, எதற்காக போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவை கடத்தப்பட்டன, இதன் பின்னணியில் உள்ளவர் யார் என்பது குறித்து விசாரித்துவருகின்றனர். ஒரே நாளில் கடத்த முயன்ற கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: 'சூர்யாவின் படப்பிடிப்பை நடத்த விட மாட்டோம்' - பாமக வெங்கடேசன்

ABOUT THE AUTHOR

...view details