தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதையாக மாறிய பிரசவ வலி மாத்திரை: மூன்றுபேர் கைது - Chennai MGR Nagar latest News

சென்னை: எம்ஜிஆர் நகரில் போதைக்காக பெண்களுக்கான பிரசவ வலிகுறைப்பு மாத்திரை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

druggist seller

By

Published : Sep 13, 2019, 11:21 AM IST

சென்னை எம் ஜி ஆர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் ரகசியமாக போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த பாலாஜி(31) மற்றும் மணிகண்டன் (19) ஆகிய இருவரும் மறைமுகமாக போதை மாத்திரை விற்பனை செய்து வந்ததது தெரியவந்தது.

இந்நிலையில், காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மது போதையை விட மகப்பேறு காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நைட்ரோ விட் மற்றும் நைட்ரோ பிளஸ் ஆகிய மாத்திரைகளை பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் போதை கிடைக்கிறது. இதனால், எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இதனை விற்பனை செய்தோம் என இருவரும் ஒப்புக்கொண்டனர்.

மேலும், இந்த வகை மாத்திரைகள் தி.நகர் சீனிவாச ரெட்டி தெருவில் அமைந்துள்ள பாலாஜி மருந்தகத்தில் இருந்து ஒரு மாத்திரை அட்டை 150 ரூபாய் வீதம் வாங்கிய மாத்திரைகளை ஒரு மாத்திரை 70 ரூபாய் என்ற வீதத்தில் விற்பனை செய்துள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனடியாக பாலாஜி மருந்தக உரிமையாளர் ரவிகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஒரு அட்டை மாத்திரையின் விலை 46 ரூபாய் என்றும் லாப நோக்கத்திற்காக ஒரு அட்டையை 150 ரூபாய்க்கு விற்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மகப்பேறு காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் வலி மாத்திரை 150 அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details