தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதைப் பொருள் சப்ளை செய்த கும்பல் கைது! - போதை பொருள் சப்பளை செய்த கும்பல் கைது

சென்னை : ஈசிஆர் சாலையில் உள்ள அக்கரை பகுதியில் போதைப் பொருள் விற்றுவந்த உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய குற்றவாளி நைஜீரிய நாட்டை சேர்ந்த காட்வின் சுக்வு

By

Published : Sep 18, 2019, 4:29 PM IST

சென்னை, ஈசிஆர் சாலையில் உள்ள அக்கரைப் பகுதியில் போதைப் பொருள் அதிகளவில் பயன்பாட்டில் இருப்பதாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் விரைந்த நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் மாணவர்களுக்கு கொகைன் போதைப் பொருள் விற்றுவந்த உகாண்டா நாட்டைச் சேர்ந்த ககூசா ஸ்டெல்லா (26) என்ற பெண்ணை கைது செய்தனர்.

போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு

மேலும், இந்த பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முக்கிய குற்றவாளியான நைஜீரிய நாட்டைச் சேர்ந்த காட்வின் சுக்வு (38) என்ற நபரை பாண்டிச்சேரி அருகே உள்ள தனியார் விடுதியில் காவல் துறையினர் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளி நைஜீரிய நாட்டை சேர்ந்த காட்வின் சுக்வு

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் மும்பையில் இருந்து கொகைன், கஞ்சாவை ரயில் மார்க்கமாக கொண்டு வந்து புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்துவருவதாக கூறினார்.

மேலும், ஒரு கிராம் கொகைன் 5 ஆயிரம் ரூபாய் முதல் 7ஆயிரம் ரூபாய்வரை விற்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்துசுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவும், 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கொகைனும் பறிமுதல் செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details