சென்னையிலிருந்து அமெரிக்காவிற்கு சரக்கு விமானத்தில் கொரியா் அனுப்ப வந்திருந்த பாா்சல்களை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது சென்னை முகவரியிலிருந்து அமெரிக்காவின் புளோரிடா நகருக்கு அனுப்ப ஒரு பாா்சல் வந்திருந்தது. அதனுள் காய்ச்சல், சளி, தலைவலி மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தன. அதை பாா்க்கும்போது கரோனா தடுப்பு மாத்திரைகள் என்பது போல் தெரியவந்தது.
பின்னர், சுங்க அலுவலர்களுக்கு அந்த பாா்சல் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பாா்சலை பிரித்து சோதனையிட்டதில், மூன்றாயிரத்து 440 மாத்திரைகள் இருந்தன. அவைகள் அனைத்தும் பலவகை போதை மாத்திரைகள் என்று தெரியவந்தது. அதன் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ.15 லட்சம் ஆகும்.