சென்னை: பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் கண்காணித்தனர்.
விமானத்தில் வந்த உகாண்டா நாட்டைச்சேர்ந்த நம்பீரா நோலின்(28) என்ற பெண்ணை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக கூறினார். மேலும் அவரிடம் சுங்க இலாகா அலுவலர்கள் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகப்பேசினார். இதையடுத்து அவரது உடமைகளை சோதனை செய்ததில் அப்போது பையில் விலையுர்ந்த போதைப்பவுடர் மறைத்து வைத்திருந்ததைக்கண்டு பிடித்தனர்.