சென்னை விமான நிலையத்தின் கொரியா் பார்சல் பிரிவில் வெளிநாடுகளிலிருந்து சரக்கு விமானங்களில் வந்திருந்த பார்சல்களை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனா்.
அப்போது நெதர்லாந்து நாட்டிலிருந்து சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு முகவரிக்கு ஒரு பார்சல் வந்திருந்தது. அதனுள் மருத்துவ பொருள்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சமீபகாலமாக மருத்துவ பொருள்கள் என்று குறிப்பிடப்பட்டு வரும் பார்சல்களில் போதை மாத்திரைகள் இருப்பதால், அலுவலர்களுக்கு அந்த பாார்சல் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. பின் அந்த பார்சலைப் பிரித்து சோதனையிட்டனர். அதனுள் ஆரஞ்சு கலரில் 100 மாத்திரைகள் இருந்ததை கண்டுப்பிடித்தனா்.