2016ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்திலிருந்து, மலேசியாவிற்கு போதை மாத்திரை கடத்த முயன்ற, சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த முகமது அலி, பழவந்தாங்கலைச் சேர்ந்த இம்ரான்கான், சிவகங்கை மாவட்ட இளையான்குடியைச் சேர்ந்த நூருல் அமீன் ஆகியோரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் கைது செய்தனர்.
போதை மாத்திரை கடத்திய மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை! - சென்னை சிறப்பு நீதிமன்றம்
சென்னை: மலேசியவிற்கு போதை மாத்திரை கடத்த முயன்ற மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போதை மாத்திரை கடத்திய மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட முகமது அலி உள்பட மூன்று பேருக்கும் பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ஏழு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: காலாவதியான மாத்திரை வழங்கிய அரசு மருத்துவர்: வயிற்று வலியால் துடித்த பெண்!