தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வெப்பன் சப்ளையர்கள் இல்ல இவுங்க...போதைப்பொருள் சப்ளையர்கள்' - பொடி வைத்துப் பிடித்த காவல்துறை! - கஞ்சா போன்ற போதைப் பொருள்

சென்னை : செயின்ட் தாமஸ் மவுன்ட் , அதன் சுற்றியுள்ளப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் போதைப் பொருள் விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போதைப் பொருள் விற்றவர்கள் கைது

By

Published : Sep 13, 2019, 10:32 PM IST

சென்னையை அடுத்துள்ள ஆதம்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுன்ட் பகுதி, அதன் சுற்றியுள்ளப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிலர் போதை மாத்திரைகள், கஞ்சா போன்ற பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

போதைப் பொருள் விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நடத்திய சோதனையில் செயின்ட் தாமஸ் மவுன்ட், இந்திரா நகரைச் சேர்ந்த காமேஷ்(22), ஆலந்தூரைச் சேர்ந்த ஸ்ரீநாத்(21) ஆகிய இருவரும் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

பின்னர், அவர்களிடமிருந்து 48 போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்த செயின்ட் தாமஸ் மவுன்ட் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details