சென்னை மயிலாப்பூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக மயிலாப்பூர் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மயிலாப்பூர் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் பெட்டியுடன் சுற்றித்திரிந்த நபரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடமிருந்த பெட்டியைப் பறிமுதல்செய்து சோதனைசெய்ததில் 370 கிராம் கெட்டமைன், 87 போதை ஸ்டாம்புகள், 33 போதை மாத்திரைகள், கஞ்சா போன்ற பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.