தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெரினாவை கண்காணிக்கிறது ட்ரோன்

சென்னை மெரினா கடற்கரையில் வழிப்பறி உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக காவல் துறையினர் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இனி திருட முடியாது... உயிரிழப்புகளை தடுக்கும்: சென்னை மெரினாவை கண்காணிக்கிறது ட்ரோன்
இனி திருட முடியாது... உயிரிழப்புகளை தடுக்கும்: சென்னை மெரினாவை கண்காணிக்கிறது ட்ரோன்

By

Published : Jul 7, 2022, 10:25 PM IST

சென்னை:முக்கிய பொழுதுபோக்கு தலமாக மெரினா கடற்கரை இருந்து வருகிறது. இந்த கடற்கரையில் தினசரி ஏராளமான மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து பொழுதை கழித்து வருகின்றனர். பலர் கடற்கரைச் சாலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கின்றனர்.

அதேபோல வெளியூர்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் மெரினா கடற்கரைக்குச் சுற்றிப் பார்க்க வந்து கடலில் குளித்து மகிழ்வது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் சமீப நாட்களாக கடலின் சீற்றம் மற்றும் கடலுக்குள் உள்ள மணற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் கடலில் குளிக்க இறங்கும் இளைஞர்கள், சிறுவர்கள் என பலர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டும், சுழலில் சிக்கியும், மணலுக்குள் சிக்கியும் உயிரிழக்கும் துயர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

கண்காணிக்கிறது ட்ரோன்

அதனடிப்படையில் மெரினா கடற்கரைப் பகுதியில் குளிப்பதற்கு தடையானது விதிக்கப்பட்டுள்ளது. தடை உள்ளதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் எச்சரிக்கை அறிவிப்புப் பலைகைகளையும் கடற்கரை மணற்பரப்பில் ஆங்காங்கே காவல்துறையால் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறியும், காவல் துறையினரின் கண்காணிப்பை தாண்டியும் பொதுமக்கள் பலர் ஆபத்தை உணராமல் தொடர்ந்து கடலில் குளித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி பட்டப்பகலில் நடைபயிற்சி மேற்கொள்ளும் நபர்களிடமும், பீச்சில் அமர வரும் நபர்களிடமும் செல்போன், செயின் பறிப்பில் ஈடுபடுவதும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் காவல்துறை தரப்பில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் ட்ரோன் மூலம் காண்காணிப்பு பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று ட்ரோன்களை பயன்படுத்தி மெரினா கடற்கரை எல்லையில் பொதுமக்கள் யாரேனும் குளிக்க எண்ணி கடலுக்குள் இறங்கியுள்ளனரா? என காவல்துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் கடலின் ஆபத்தை உணர்ந்து, தங்கள் உயிருக்கு முக்கியத்துவம் அளித்து கடலில் குளிக்க எண்ணுவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:காதலர் தினத்தன்று களைகட்டிய மெரினா

ABOUT THE AUTHOR

...view details