தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆந்திர மாநிலம் நோக்கி நடைபயணம் சென்ற கார் ஓட்டுநர்கள் கைது! - தமிழ்நாடு கரோனா செய்திகள்

சென்னை: கரோனா நிவாரணம் வழங்காத தமிழ்நாடு அரசை கண்டிக்கும் விதமாக, ஆந்திர மாநில முதலமைச்சரிடம் வேலை வழங்கக்கோரி நடைபயணம் மேற்கொண்ட ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Drivers arrested for hiking in Andhra Pradesh
Drivers arrested for hiking in Andhra Pradesh

By

Published : Jul 27, 2020, 8:46 PM IST

கரோனா வைரஸ் காரணமாக வேலையின்றி தவிக்கும் கார் ஓட்டுநர்களுக்கு, தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் சார்பில் இழப்பீடு வழங்கவேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆனால் இவர்களின் கோரிக்கைகள் மீது அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதனால் வேலை இல்லாமலும், நிவாரண உதவி இல்லாமலும், வங்கிக் கடன் கட்ட இயலாமலும் ஓட்டுநர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை அசோக் பில்லரிலிருந்து நடை பயணமாக நூறுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், ஆந்திர மாநிலத்திற்கு சென்று அம்மாநில முதலமைச்சரை சந்திக்க திட்டமிட்டனர்.

அப்போது, காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மேலும், தங்களது கோரிக்கையை ஏற்று அரசு உதவி செய்ய முன்வரும் வரை, பல்வேறு வகையான போராட்டங்கள் தொடரும் என ஓட்டுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details