தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.. குடிநீர் வாரியம் தகவல்! - Chennai Water Board

சென்னை நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.

குடிநீர் வாரியம் தகவல்
சென்னையில் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 2:26 PM IST

சென்னை: நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால் அக்டோபர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நெம்மேலியில் அமைந்துள்ள, நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக நாளை (அக்.17) காலை 9 மணி முதல் நாளை மறுநாள் (அக்.18) காலை 9 மணி வரை அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

குடிநீர் நிறுத்தப்படும் பகுதிகள், அடையார் மண்டலம்: தரமணி, கோட்டூர் கார்டன், ஆர்.கே.மடம் தெரு, திருவான்மியூர், வேளச்சேரி மற்றும் இந்திரா நகர் மேல்நீர் தேக்கத் தொட்டி பகுதிகள்.

பெருங்குடி மண்டலம்: கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் மற்றும் புழுதிவாக்கம் பகுதிகள்.

இதையும் படிங்க:பிளிப்கார்ட் தி பிக் பில்லியன் டேஸ் ஆஃபர்.. 7 நாட்களில் 140 கோடி வாடிக்கையாளர்கள் விசிட்.!

சோழிங்கநல்லூர் மண்டலம்: ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, வெட்டுவாங்கேணி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி மற்றும் ஒக்கியம்-துரைப்பாக்கம் ஆகிய 3 மண்டலங்களில், 19 இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"தமிழ்நாடு வரலாறு திமுக ஆட்சியில் தொடங்கவில்லை.. காமராஜர், கக்கனை மறந்த சோனியா, பிரியங்கா" - வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details