சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால், அதனைக் கண்டித்து குடிநீர் ஆலைகள் உரிமையாளர் சங்கத்தினர் கடந்த ஏழு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவந்தனர். அதனால் முக்கிய நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்ட கேன் குடிநீரை பயன்படுத்தும் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
உயர் நீதிமன்ற உத்தரவு: குடிநீர் ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்! - குடிநீர் ஆலைகள் வேலை நிறுத்தம் முடிவு
சென்னை: அனுமதி பெறாமல் செயல்படும் குடிநீர் ஆலைகள் அனுமதி வழங்கக்கோரி மனு அளித்தால் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
drinking-water-plants
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அனுமதி பெறாமல் செயல்படும் குடிநீர் ஆலைகள் அனுமதி வழங்கக்கோரி மனு அளித்தால், அவற்றைப் பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவையடுத்து, குடிநீர் ஆலைகள் சங்கத்தினர், உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க:குடிநீர் ஆலைகள் போராட்டத்தை கைவிடக் கோரி மக்கள் வேண்டுகோள்